உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தேவதானப்பட்டி அருகே தீ விபத்தில் கரும்புத் தோட்டம் நாசம்

Published On 2022-03-23 06:07 GMT   |   Update On 2022-03-23 06:07 GMT
தேவதானப்பட்டி அருகே தீ விபத்தில் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது.
தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் அப்பகுதியில் சுமார் 8 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். 

தோட்டத்தில் உள்ள வரப்பு முள்வேலியில் தீ வைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ தோட்டத்துக்குள் பரவியது.

இதில் சுமார் 4 ஏக்கர் கரும்பு தோட்டம், நீர்பாசன பைப் ஆகியவை சேதம் அடைந்தன. 

இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போ£லீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News