உள்ளூர் செய்திகள்
டிடிவி தினகரன்

தண்ணீர் பந்தலை திறந்து உதவிட வேண்டும்- அ.ம.மு.க.வினருக்கு டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்

Published On 2022-03-23 09:58 IST   |   Update On 2022-03-23 09:58:00 IST
தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்களையும் நீர் மோர்ப் பந்தல்களையும் திறக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோடைகாலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்துகிறது. இன்னும் போகப்போக வெயிலின் தாக்கம் அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நேரத்தில் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற அம்மாவின் வழியில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்களையும் நீர் மோர்ப் பந்தல்களையும் திறந்திட வேண்டுகிறேன். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதியில் இருக்கிற கழக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கண்மணிகளின் இந்தப் பணி, பாதசாரிகளுக்கும், இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும். அதற்கு ஏற்றவாறு இடங்களைத் தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர்ப்பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News