உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஜவுளி சந்தையில் விற்பனை சூடுபிடித்தது

Published On 2022-03-22 15:57 IST   |   Update On 2022-03-22 15:57:00 IST
கோடை காலம் என்பதால் காட்டன் ரகங்களுக்கு கிராக்கி ஏற்பட் டுள்ளதாகவும், இன்னும் வரும் வாரங்களில் காட்டன் ரகங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
ஈரோடு:

ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெற்று வருகின்றது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.

கொரோனா தாக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நூல் விலை உயர்வு போன்ற காரணமாக   கடந்த சில வாரங்களாக விற்பனை மந்த நிலையில் இருந்து வந்தது. 

குறிப்பாக மொத்த வியாபாரிகள் வராத நிலையில், சில்லரை வியாபாரம் மட்டுமே கை கொடுத்து வந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் மொத்த வியாபாரம் 40 சதவீதம் அளவுக்கு நடைபெற்றதால் ஜவுளி சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதே அளவுக்கு சில்லரை வியாபாரமும் நடந்ததாக வியாபாரிகள் கூறினர். 

குறிப்பாக காட்டன் ரக சேலைகள், நைட்டிகள், லுங்கி, பனியன் உள்ளிட்டவைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றதாகவும், காட்டன் ரக சேலைகள் பெரும்பாலும் விற்று தீர்ந்து விட்டதாக வியாபாரிகள் கூறினர்.

கோடை காலம் என்பதால் காட்டன் ரகங்களுக்கு கிராக்கி ஏற்பட் டுள்ளதாகவும், இன்னும் வரும் வாரங்களில் காட்டன் ரகங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர். 

Similar News