உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்
பண்ருட்டி அருகே கூரை வீடு எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே பலாபட்டு திடீர் குப்பத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது கூரை வீடு திடீர் தீ பற்றி எரிந்தது இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்புவீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்துஅணைத்தனர்.