உள்ளூர் செய்திகள்
வேலூர் அருகே பைக் விபத்தில் தோழியுடன் வந்த வாலிபர் பலி
வேலூர் அருகே பைக் விபத்தில் தோழியுடன் வந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:
பெங்களூரு நரசிம்ம ரெட்டி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 26) இவர் நேற்று அவரது தோழி முல்லையரசி (25) என்பவருடன் பைக்கில் சென்னை நோக்கி வந்தனர்.
வேலூர் அருகே உள்ள மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சாலை தடுப்பில் எதிர்பாராதவிதமாக பைக் மோதியது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். விரிஞ்சிபுரம் போலீசார் அவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியிலேயே ஜெயபிரகாஷ் இறந்தார். முல்லையரசிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.