உள்ளூர் செய்திகள்
அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத் விவசாயிகளுக்கு விருது வழங்கினார்.

இயற்கை விவசாயிகளுக்கு வேளாண்மை செம்மல் விருது

Published On 2022-03-22 15:01 IST   |   Update On 2022-03-22 15:01:00 IST
ஆயக்காரன்புலத்தில் இயற்கை விவசாயிகளுக்கு வேளாண்மை செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
வேதாரண்யம்:

தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு
10,000 உதவித் தொகை வழங்க முன்வந்ததுபோல் நாடு முழுவதும் திட்டம் கொண்டுவரவேண்டும் எனஅகில இந்திய விவசாய சங்க தலைவர் ராகேஷ்திகாயத் பேசினார்.

வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் 200 விவசாயிகளுக்கு வேளாண்மைச் செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ்தியாகத், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சன், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத் பேசும்போது, தெலுங்கானாவில் அம்மாநில அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்க முன்வந்துள்ளது.

இதுபோன்ற திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும். விளை பொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றார்.

Similar News