உள்ளூர் செய்திகள்
டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

பத்மஸ்ரீ விருது பெற்ற முத்துக்கண்ணம்மாள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை

Published On 2022-03-22 14:57 IST   |   Update On 2022-03-22 14:57:00 IST
முத்துக்கண்ணம்மாள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை  :

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி,   விராலிமலை வடக்கு  தெருவை சேர்ந்த முத்து கண்ணம்மாள் என்ற கலைஞர் சதிர் நடனத்தை முழுமையாக தெரிந்தவராவார். 

இவருக்கு 90 வயது நடை பெற்று வரும் நிலையில்,  மத்திய அரசு அறிவித்த பத்ம ஸ்ரீவிருதில் அவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், அம்மையார் முத்து கண்ணம்மாளை முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும்   தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து  பட்டாடை அணிவித்து அன்பளிப்பு அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

இவருக்கு ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு உல கப்  புகழ்பெற்ற  கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு விராலிமலையில்  நடைபெற்றது. அப்பொழுது முத்துக்கண்ணம்மாளுக்கு பொற்கிழி மற்றும் உதவி தொகையை முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேற்று டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், பரத நாட்டியத்தின் ஆதிவடிவம் என அழைக்கப்படும் ‘சதிராட்டத்தின்’ அடையாள மாக  வாழ்ந்து  வரும்  நம் விராலிமலையைச் சார்ந்த முத்துக்கண்ணம்மாளுக்கு  நாட்டின்  மிக  உயரிய  விரு தான பத்மஸ்ரீ விருது வழங் கப்பட்டிருக்கிறது.

நம்  விராலிமலையின் பெயரை, தமிழ்நாட்டின் அடையாளத்தை  இந்திய அரங்கில் ஒலிக்கச் செய்த முத்துக்கண்ணம்மாள்  நம் மண்ணின் பெருமைமிகு அடையாளம். சமீபத்தில் அவருடைய மகள்அளித்த நேர்காணலில், ‘குடும்பச் சூழலை   கருத்தில்   கொண்டு குடும்பத்தில்  யாராவது  ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென’ அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். 

நிச்சயம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையினைவழங்கி  நம்  மண்ணின்   அடையாளமான முத்துக்கண்ணம்மாளுக்கு பெருமை  சேர்க்க  வேண்டு மென விராலிமலை சட்ட மன்ற  உறுப்பினர் என்ற முறையில் முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News