உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

உலக வன நாள் விழா விழிப்புணர்வு

Published On 2022-03-22 14:10 IST   |   Update On 2022-03-22 14:10:00 IST
உலக வன நாள் விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம்,  மச்சுவாடி அரசு  முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி  வளாகத் தில் உலக வன நாள் விழா  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு  தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பள்ளி வளாகத்தில் மரக் கன்றினை நட்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் மார்ச் 21 ஆம்  நாள்  உலக  நாளாக கொண்டாட தீர்மானம் நிறை வேற்றப்பட்டதன்  அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி உலக வனநாளாக வனத்துறையின் மூலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காடுகள் எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகிறது.   அவற்றை பாதுகாக்க நாம் காடுகளை பாதுகாக்க வேண்டும். காடு செழித்தால் நாடு செழிக்கும். அதன்படி   நடப்பாண்டில் ‘மரம் நடுவோம்&வெப்பம் தனிப்போம்” என்ற தலைப் பில் விழப்புணர்வு ஏற்படுத் தப்பட்டு வருகிறது.

எனவே ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் 21 ஆம்  தேதி கொண்டாடப்பட்டு  வரும் உலக வனதினத்தில் வனங்க ளின் அவசியம் பற்றியும், அவைகள் எவ்வாறு உயிரி னங்களுக்கு வாழ்வாதார மாக விளங்கி நம்மை வாழ வைத்து கொண்டிருக்கிறது என்பது குறித்தும், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன் மைகள் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவ, மாணவியர் அக்கறையுடன் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும்.  உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். சத்தான உணவுப்  பழக்கத்தை  பின் பற்ற வேண்டும். நூலகங்களில்  அறிவை  வளர்க்கும் நூல்களை படிக்க வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவி கீர்த்திகா மரம் நடுதலின் அவசியம் குறித்து உரையாற்றியதற்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

Similar News