உள்ளூர் செய்திகள்
மாடு, குதிரை வண்டி எல்கை பந்தயம்
வம்பன் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் தேர்த்திரு விழாவை முன்னிட்டு மாடு, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பங்குனி தேர்த்திரு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனையொட்டிமாஞ்சான் விடுதி மற்றும் கொத்தக்கோட்டை ஊராட்சிகள் இணைந்து நடத்தும் மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயம் வம்பன் வீர காளியம்மன் கோவில் வாசல் திடலில் இருந்து நடைபெற்றது.
மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள்எல்கை பந்தயத்தை விழாக்குழுதலை வரும், கொத்தக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரு மான மயிலன் மற்றும் செயலாளர் இளையசூரியன், மாஞ்சான்விடுதி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் கண்ணன் ஆலங்குடி நகரச் செயலாளர் பழனிவேல் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கொடிய சைத்து துவக்கி வைத்தனர்.
வம்பன் கோவில் வாசலிலிருந்து இருந்து தொடங்கிய பந்தயம் திருவரங்குளம் கேப்பரை சென்று மீண்டும் வம்பனை வந்தடைய சுமார் 10 கிலோ மீட்டர் வரை எல்கை வைக்கப்பட்டிருந்தது. முதல் பரிசாக 30,000, ஆயிரம் முதல் , கடைசி பரிசு 1,000 வரை தொகை வழங்கப் படுகிறது.
புதுக்கோட்டை தஞ்சை, திருச்சி சிவகங்கை, மதுரை, காரைக்குடி, விருது நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 200&க்கும் அதிகமான மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தய எல்கை களத்தில் கலந்து கொண்டன.