உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

Published On 2022-03-22 07:37 GMT   |   Update On 2022-03-22 07:37 GMT
வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொடுக்கூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் இடையக்குறிச்சி, துளர் மற்றும் கொடுக்கூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் 4,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களில் 2,166 பேர் கடந்த ஆண்டு நகைக்கடன் பெற்ற நிலையில் தற்போது 576 விவசாயிகளுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகக்கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடன் தள்ளுபடி பெறாத விவசாயிகள், அனைவரக்கும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் குவாகம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதே போல ஆனந்தவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கீழ ஆனந்தவாடி, சோழன்குறிச்சி, ஆனந்தவாடி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 4,200 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 1,530 பேர் கடந்த ஆண்டு நகைக்கடன் பெற்ற நிலையல் 527 விவசாயிகளுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து நகைக்கடன் தள்ளுபடி பெறாத விவசாயிகள்  வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தவலறிந்து வந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சமாதானப்படுத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர். 
Tags:    

Similar News