உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

2 மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல்

Update: 2022-03-22 06:55 GMT
2 மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியை சேர்ந்த சில மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக தீராத காய்ச்சல்  இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆகியோருக்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கறம்பக்குடி பகுதிகள் முழுவதும் பேரூராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News