உள்ளூர் செய்திகள்
துப்புரவு பணி முகாமை நகராட்சி தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி தொடங்கி வைத்தார்

திருவேற்காட்டில், துப்புரவு பணி முகாம்- நகராட்சி தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி தொடங்கி வைத்தார்

Published On 2022-03-22 11:58 IST   |   Update On 2022-03-22 11:58:00 IST
நகராட்சி பகுதிக்குள் வசிக்கும் மக்கள் குப்பைகள் தேங்காதவாறு நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து குப்பையில்லா திருவேற்காடு என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பூந்தமல்லி:

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக மாஸ் கிளீனிங் என்ற பெயரில் ஒட்டு மொத்த துப்புரவு பணி முகாமை 4-வது வார்டு கோலடியில் நகராட்சி தலைவர் என்.ஈ.கே. மூர்த்தி தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒரே நாளில் ஒட்டு மொத்த குப்பையையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் நகராட்சி துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், வார்டு கவுன்சிலர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நகர்மன்ற தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி கூறியதாவது:-

நகராட்சிக்குட்பட்ட 30 இடங்கள் அதிக அளவில் குப்பை உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் உள்ள குப்பைகள் அனைத்தையும் ஒரு வார காலத்தில் முற்றிலும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பை அகற்றப்படும் பகுதிகள் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன், மீண்டும் குப்பைகள் சேராதவாறு கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 30 முதல் 40 டன் வரை திடக்கழிவுகள் அகற்றப்பட உள்ளன.

நகராட்சி பகுதிக்குள் வசிக்கும் மக்கள் குப்பைகள் தேங்காதவாறு நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து குப்பையில்லா திருவேற்காடு என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Similar News