உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் மீது பெற்றோர்களின் மேற்பார்வை அவசியம்

Published On 2022-03-21 15:37 IST   |   Update On 2022-03-21 15:37:00 IST
ஆலங்குடி வடகாடு முக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை

ஆலங்குடி வடகாடு முக்கம் அருகே உள்ள அரசு  நடுநிலைப் பள்ளியில்  பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் கருப்பையா தலைமை  வகித்தார். ஆலங்குடி டி.எஸ்.பி. வடிவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,   பள்ளிக் குழந்தைகளின்  பாதுகாப்பு குறித்தும்,

குழந்தைகளின் பாதுகாப்பு எண்கள் குறித்தும், போக்சோ  சட்டத்தில் குழந்தைகள் மீதான சட்டப் பாதுகாப்பு குறித்தும்,  குழந்தைகள் மீது பெற்றோர்களின் அக்கறை, மேற்பார்வையின் அவசியம் குறித்தும் பேசினர்.

அரசு  பள்ளிகளின் மாணவர்களுக்கு   அரசு செயல் படுத்தும் நலத்திட்டங்கள் குறித்தும், பெற்றோர்களின் கடமைகள் குறித்தும் ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் ஆலங் குடி அனைத்து மகளிர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் பேசினர்.  

Similar News