உள்ளூர் செய்திகள்
அரசு டவுன் பஸ்களில் ஆண்களும் இலவச பயணம் செய்ய அனுமதி கோரி மனு அளித்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களுக்கும் இலவச பஸ் வசதி கேட்டு மனு

Published On 2022-03-21 15:36 IST   |   Update On 2022-03-21 15:36:00 IST
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களுக்கும் இலவச பஸ் வசதி கேட்டு மனு அளித்தனர்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்து தேசிய கட்சியினர் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை போன்று வறுமை கேட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை ஆண்களுக்கும் பஸ்சில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அங்கீகாரத்துடன் கூடிய இலவச பஸ் பயணத்தை உறுதி செய்ய வேண்டும். அதே சமயம் பெண்களுக்கு தமிழகம் முழுவதும் செல்வதற்கு இலவச பஸ் பயணத்தை உறுதி செய்ய வேண்டும். 

இதில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடு இன்றி உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Similar News