உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்
வேலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது.
வேலூர்:
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் காட்பாடியில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் நடந்து வருகிறது.
கடந்த 15&ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்றது. ஏராளமான ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்று சென்றனர்.
16&ந் தேதி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் குறித்த கவுன்சிலிங் தொடங்கியது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிக அளவில் வட மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாகவும் சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்ய வேண்டியுள்ளது.
இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு ஒவ்வொரு பாடப் பிரிவிலும் ஆசிரியர்கள் சுமார் 2000 முதல் 2500 பேர் வரை தமிழகம் முழுவதும் விண்ணப்பித்திருந்தனர்.
இதனால் இந்த இடமாறுதல் கவுன்சிலிங் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை கவுன்சிலிங் நடைபெற்றது.
இன்று 4&வது நாளாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கவுன்சிலிங் நடைபெற்றது. 4 நாட்களாக ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்று வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:&
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஆசிரியர்கள் 2000&க்கும் மேற்பட்டோர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் தாமதமாக கவுன்சிலிங் நடந்து வருகிறது. நாளை இந்த கவுன்சிலிங் முடிந்து விடும் என்றனர்.