உள்ளூர் செய்திகள்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சாய்நாதபுரம் சாஸ்திரிநகர் பொதுமக்கள்.

வேலூரில் பல ஆயிரம் பேர் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிக்க முயற்சி- கலெக்டர் அலுவலகத்தில் புகார்

Published On 2022-03-21 15:36 IST   |   Update On 2022-03-21 15:36:00 IST
வேலூர் சாய்நாதபுரத்தில் பல ஆயிரம் பேர் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
வேலூர்:

வேலூர் சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

வேலூர் சாய்நாதபுரம் சாஸ்திரிநகர், ஜெசி நகர், கணபதி நகர், புதுமை நகர், ஆர்.வி. நகர், கமலா காடன். கண்ணதாசன் நகர ஆசிரியர் நகர் செட்டியார் தோப்பு, அசோகன் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், சபாபதி நகர், கன்னிகாபுரம், முருகன் நகர் பகுதியில் சுமார் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள சுடுகாட்டு பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறோம். இதில் தனியார் கல்லூரி நிர்வாகம் சாலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த சாலை பகுதியில் நேற்று சாமி சிலை ஒன்று வைத்தோம். அதற்கும் கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பல ஆயிரம் பேர் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Similar News