உள்ளூர் செய்திகள்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிலை கண்டறிய விழிப்புணர்வு வாகனம்
அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் சூரிய ஒளியில் இயங்கும் வாகனத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 1 முதல் 6 வயது குழந்தைகளுக்கான எடை, உயரம் மற்றும் அவர்களது வளர்ச்சி கண்காணிக்க சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் சக்தி வாகன் விழிப்புணர்வு வாகனத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தொல்.திருமாவளவன் எம்.பி., கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்டத்தில் 1 முதல் 6 வயது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குள்ளத்தன்மை அதிகமாக காணப்படுகிறது.
மேலும் ஊட்டச்சத்து நிலையை அதிகப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் சக்தி வாகன் விழிப்புணர்வு வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாகனத்தின் மூலம் 1 முதல் 6 வயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இனப்பெண்கள் மற்றும் வளர் இன ஆண்கள் ஆகியோர் அவர்களின் ஊட்டச்சத்து நிலையை அறிந்து கொள்ளலாம்.
மேலும், இவ்வாகனத்தில் எடைக்கு தகுந்தவாறு, எடை அதிகரிக்க மற்றும் குறைக்க, இரும்பு சத்து உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகள், போலிக் ஆசிட் நிறைந்த உணவுகள் போன்ற ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் பொறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாகனம் தமிழகத்தில் முதல்முறையாக அரியலூர் மாவட்டத்தில் தயார் செய்யப்பட்டு, அரியலூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பயனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தினால் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது.
பொதுமக்கள் இவ்வாகனத்தினை பயன்படுத்தி 1 முதல் 6 வயது குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் அவர்களது வளர்ச்சி அறிந்து, ஊட்டச் சத்து நிலையை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.