உள்ளூர் செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-21 14:10 IST   |   Update On 2022-03-21 14:10:00 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாணக்கன்காடு கிராமத்தில்பட்டியல் இனஇளைஞரை தாக்கி வன்கொடுமை  செய்தவர்களை கைது செய்யக்கோரி கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய  செயலாளர் செல்வரெத்தினம்  தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாதிய   அடக்குமுறைக்கு எதிராகவும்,  குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் விசிக முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் கண்டன உரை நிகழ்த்தினார்.  

இதில்  மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு   மாவட்ட செயலாளர்  ஆசைதம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட,  ஒன்றிய, நகர நிர்வாகிகள்,   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்,  த.மு.மு.க.வினர், ம.ஜ.க.வினர், எஸ்.டி.பி.ஐ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News