உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

எல்கை பந்தையம்

Published On 2022-03-21 12:16 IST   |   Update On 2022-03-21 12:16:00 IST
கோவில் திருவிழாவினை முன்னிட்டு எல்கை பந்தையம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குன்னூரில் காமண்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற கைப்புறா எல்கை பந்தையத்தில் குண்டகவயல், தொன்டைமானேந்தல், வீரராகவபுரம், பள்ளத்திவயல், மேல்மங்கலம் கிடங்கிவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் போட்டியில் பங்கேற்றன.

குன்னூர், வெண்ணாமொழியேந்தல் கிராம கோயில் எல்லையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் பந்தையம் எல்லை வகுக்கப்பட்டிருந்தது. இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு பூஞ்சிட்டு என 4 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

பந்தயத்தில்  சீறிப்பாய்ந்த மாட்டை கையில் பிடித்துக்கொண்டு வீரர்கள் பந்தய இலக்கினை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பணம் மற்றும் நினைவுக் கோப்பை  பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டுரசித்தனர்.

Similar News