உள்ளூர் செய்திகள்
லதா மங்கேஷ்கர்

தமிழக சட்டசபையில் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்

Published On 2022-03-21 06:20 GMT   |   Update On 2022-03-21 06:20 GMT
தமிழக சட்டசபையில் பிரபல பிண்ணனி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அனைத்து உறுப்பினர்களும் 2 மணித்துளிகள் எழுந்து நின்றனர்.
சென்னை:

தமிழக சட்டசபை இன்று கூடியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் கோ.ஜானகிராமன், என்.கருப்பண்ண உடையார், பெ.மாரப்பன், மு.மு.அ.ரசாக், வேழவேந்தன் ஆகிய 5 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு பிரபல பிண்ணனி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அனைத்து உறுப்பினர்களும் 2 மணித்துளிகள் எழுந்து நின்றனர்.
Tags:    

Similar News