உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

Published On 2022-03-20 15:50 IST   |   Update On 2022-03-20 15:50:00 IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் சலவன் பேட்டையைச் சேர்ந்தவர் மணி (வயது 31). இவர் ஒரு விதவை பெண்ணை 2- வதாக திருமணம் செய்து கொண்டார்.

அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் மணி சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆனால் தாயார் இதனை பற்றி கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். 

இது குறித்து சிறுமி உறவினர்களிடம் நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணியையும் மற்றும் சிறுமியின் தாயாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News