உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சேத்துப்பட்டில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

Published On 2022-03-20 15:20 IST   |   Update On 2022-03-20 15:20:00 IST
சேத்துப்பட்டில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்றனர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் பாண்டியன் (வயது 44) மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

வழக்கம் போல் பாண்டியன் கடந்த 17&ந் தேதி இரவு டாஸ்மாக் மதுபான கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் 18&ந் தேதி கடையை திறப்பதற்காக வந்தார்.

அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது மது பாட்டில்கள் திருடபட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து சேத்துப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட மது மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம்வரை இருக்கும் என கூறப்படுகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை  தேடி வருகின்றனர்.

Similar News