உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தொழில்பூங்கா காட்பாடி தொகுதியில் அமைகிறது

Published On 2022-03-19 15:16 IST   |   Update On 2022-03-19 15:16:00 IST
தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தொழில்பூங்கா காட்பாடி தொகுதியில் அமைய உள்ளது.
வேலூர்:

வேலூருக்கு சுற்றுலாப் பயணிகளும், சிகிச்சைக்காக நோயாளிகளும், கல்விக்காக மாணவர்களும் என வெளி மாவட்ட, வெளி மாநில, வெளி நாடுகளில் இருந்து அதிகளவில் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில், வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக வேலூர் திகழ்ந்தாலும் இந்த மாவட்ட த்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகளோ, தொழில் நிறுவனங்களோ இல்லாதது மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், வேலூர் இளைஞர்கள் படித்து முடித்து விட்டு வேலைவாய்ப்புக்காக சென்னை, பெங்களூரு உள்பட வெளியூர்களுக்கும், வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. சொந்த மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாதது பள்ளிக் கல்வியில் வேலூர் மாவட்டம் பின்னடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

இதனால், மாவட்டத்தில் வேலைவாய்ப்பை பெருக்கிட தொழிற்பேட்டை, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்பது வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். 

இதுதொடர்பாக ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் முக்கிய வாக்குறுதிகளை அளிப்பது வழக்கம் எனினும், வேலூர் மாவட்டத்தில் தொழிற் பேட்டை அமைப் பதற்கான ஏற்பாடுகள் நடக்கவில்லை.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022&23&ம் ஆண்டுக்கான நிதிநிலை படஜெட்டில் வேலூர், கோவை, மதுரை, பெரம்பலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் விதமாக தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முன்னோட்ட மாகவே வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் ஊராட்சியிலுள்ள சுமார் 2,000 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆகியோர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனா.¢

இந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைய உள்ளது. தற்போது தமிழக நிதிநிலை அறிக்கையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது வேலூர் மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

வேலூரில் தொழிற் பேட்டை அமைந்தால் இங்கே தொழில் தொடங்கிட ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதன்மூலம், நேரடியாக வும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News