உள்ளூர் செய்திகள்
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு மருத்துவ உதவி மனநல ஆலோசனை காவல் உதவி சட்ட உதவி தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கிய அவர்களைப் பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சகி அம்மா சேவை மையம் செயல்படுகிறது.
இங்கு பணிபுரிய நிலையில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாகை மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலகத்தில் தங்கள் சுய விவரங்களுடன் தெரிவிக்கப்படுகிறது.
பதவி வழக்கு பணியாளர் 2 பேர் இடம் 4 வயது வரம்பு 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 24 மணி நேர சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும். உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரம், சிறப்பு ஊதியம் ரூ.3000. பல்நோக்கு உதவியாளர் பணியிடம் 1- கல்வித்தகுதி 8-வது, 10-வது தேர்ச்சி, தோல்வி. வயதுவரம்பு 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்த பெண் பணியாக இருக்க வேண்டும். உள்ளூரை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
தொகுப்பு ஊதியம் ரூ.6400. பாதுகாவலர் பணியிடம் ஒன்று கல்வித் தகுதி 8&ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி தோல்வி. வயதுவரம்பு 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உள்ளூரை சேர்ந்தவராக வேண்டும். தொகுப்பு ஊதியம் ரூ.10 ஆயிரம். விருப்பமுள்ளவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலகம், நீலா தெற்கு வீதி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.