உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் போடிபேட்டையில் குடிநீர் கிணறுகள் சீரமைப்பு
குடியாத்தம் போடிபேட்டையில் குடிநீர் கிணறுகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் போடிபேட்டை அருகே கவுண்டன்யமகாநதி ஆற்றில் காமராஜர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் 1959-ம் ஆண்டு குடிநீர் தேவைக்காக 2 கிணறுகளை அமைத்து தந்தார்.
கடந்த பல வருடங்களாக இந்த கிணறுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்த 2 கிணறுகள் மூலம் தினமும் குறைந்தபட்சம் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு போடி பேட்டை புவனேஸ்வரி பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் தரப்பட்டு வந்தது.
கடந்த சில வருடங்களாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது அதனால் இந்த கிணறுகள் கண்டுக்காமல் விடப்பட்டது.
இதணை தொடர்ந்து அந்த கிணறுகள் சீரமைக்கப்பட்டு நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. இதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். நகர்மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆட்டோ மோகன், நவீன்சங்கர், நகராட்சி என்ஜினீயர் சிசில்தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்துகொண்டு குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் எம்.முத்து, எஸ். பார்த்திபன் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.