உள்ளூர் செய்திகள்
நன்னிலம் நுகர்பொருள் வாணிப கழகத்தில் வடமாநில வாலிபர் திடீர் சாவு
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள வண்டாம்பாளையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவேந்திர ஹனி (வயது 26) பணியாற்றி வந்தார்.
இவர் பணியில் இருக்கும் போது திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.