உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம் மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் என வழங்கப் பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் சொந்த நிலம் வைத்திருக்கும் அனைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்கின்ற விவசாயிகள் இதில் பங்கு பெறலாம். விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்று இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி சமர்ப்பிக்க கடைசி நாளாகும்.
மேலும் இது குறித்த விவரங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அரக்கோணம்&94436 96846,ஆற்காடு-97503 90717, காவேரிப்பாக்கம்-90254 68461, சோளிங்கர்-94864 07176, நெமிலி- 90254 68461, திமிரி-97896 36301, வாலாஜா- 96885 41875