உள்ளூர் செய்திகள்
குடோனில் நின்ற லாரியிலிருந்து ரூ.1.74 லட்சம் மது பாட்டிகள் திருட்டு
குடோனில் நின்ற லாரியிலிருந்து ரூ.1.74 லட்சம் மது பாட்டிகள் திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் வாளகத்தில் டாஸ்மாக் மாவட்ட குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் இயங்கி வரும் கல் டிஸ்டில்லரிஸ் சாராய தொழிற்சாலையிலிருந்து பிராந்தி பாட்டிகள் குடோனில் இறக்குவதற்காக ஒரு டார்ஸ் லாரியில் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
சம்பவத்தன்று அதிகாலையில் லாரியிலிருந்து ரூ.1.74 லட்சம் மதிப்புள்ள மது பாட்டிகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து தொழிற்சாலை மேலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளனூர் சிறப்பு சப்இன்ஸ்¢பெக்டர் குடுமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
டாஸ்மாக் குடோனில் மதுபாட்டிகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் குடோன் மற்றும் அலுவலக வளாகத்தில் சிசிடிவி காமிரா செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.