உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் அருகே போலி மெசேஜ் அனுப்பி ரூ.74 ஆயிரம் திருட்டு

Published On 2022-03-18 15:20 IST   |   Update On 2022-03-18 15:20:00 IST
வேலூர் அருகே வங்கி கணக்கில் பணம் எடுத்ததாக போலி மெசேஜ் அனுப்பி ரூ.74 ஆயிரம் திருட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:

வேலூர் அடுத்த கீழ் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுதாகர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

இவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 14-ந்தேதி ரூ.65 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக செல்போன் எண்ணிற்கு போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுதாகர் உடனடியாக இணையதளத்தில் இருந்த வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பேசிய மர்ம நபர் போலியான ஆன்லைன் முகவரியை கொடுத்து அதில் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்யுமாறு கூறினார்.

அதன்படி வங்கி விவரங்களை பதிவு செய்தார். ஒரு சில நொடிகளில் சுதாகரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.49,999 மற்றும் ரூ.24,999 என 2 தடவையாக ரூ.74,998 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News