உள்ளூர் செய்திகள்
வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

வாலாஜா அருகே வெல்டிங் தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல்

Published On 2022-03-18 15:11 IST   |   Update On 2022-03-18 15:11:00 IST
வாலாஜா அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்ட வெல்டிங் தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வாலாஜா:

வாலாஜா அடுத்த விசி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல்(27). வெல்டிங் தொழிலாளி. 

இவர் வாலாஜா அடுத்த ரபிக் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதியில் நேற்று முன்தினம் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உடலை வாங்க அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு நேற்று மாலை வந்தனர். அப்போது அவர்கள் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

ஞானவேல் சாவில் மர்மம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பிரேத பரிசோதனை செய்த பின்னர் ஞானவேல் உடலை பெற்றுச் சென்றனர். 

திடீர் சாலை மறியலால் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News