உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய எஸ்.பி. அலுவலகத்தை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்

ராணிப்பேட்டையில் கட்டப்பட்டு வரும் எஸ்.பி. அலுவலகத்தை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

Published On 2022-03-18 15:07 IST   |   Update On 2022-03-18 15:07:00 IST
ராணிப்பேட்டையில் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய எஸ்.பி. அலுவலகத்தை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை:

வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை புதிய மாவட்டமாக உதயமானது.

ராணிப்பேட்டை பாரதி நகா¤ல் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ரூ.12 கோடியே 2.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட புதிய எஸ்பி அலுவலக கட்டிடத்தை நேற்று இரவு 9 மணி அளவில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் ஒப்பந்ததாரர் ஆனந்தகுமார் என்பவா¤டம் புதிய எஸ்பி அலுவலக கட்டிடம் எத்தனை ஏக்கர் பரப்பளவில் மேலும் எவ்வளவு மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அலுவலகத்தில் எந்தெந்த வேலைப்பாடுகள் என்னென்ன பணிகள் நடந்து வருகின்றன என்பது குறித்து கேட்டறிந்தார். 

இதற்கு ஒப்பந்ததாரர் 5.11 ஏக்கர் நிலப் பரப்பளவில் உள்ள நிலத்தில் புதிய எஸ்பி அலுவலக கட்டிடம் 31 சென்டில் ரூ.12 கோடியே 2.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. 

மேலும் பல்வேறு து£¤த பணிகள் நடந்து வருவது குறித்தும் தொ¤வித்தார்.மேலும் புதிய எஸ்பி அலுவலக கட்டிடம் ஒப்பந்த காலம் 11 மாதங்கள் எனவும் பணி துவங்கிய நாள் 7-7-2021 பணி முடிவுறும் நாள் 6-6-2022 என கூறப்படுகிறது. 

மேலும் மூன்று மாதங்கள் கூடுதலாக அவகாசம் கேட்கப்பட்டுள்ளது என ஒப்பந்ததாரர் தொ¤வித்தார். 

இதனைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், ஏடிஎஸ்பி முத்துகருப்பன், டிஎஸ்பி பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News