உள்ளூர் செய்திகள்
ஆற்காடு பஸ் நிலையத்தில் நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் ஆய்வு செய்தார்.

ஆற்காடு பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு

Published On 2022-03-18 15:04 IST   |   Update On 2022-03-18 15:04:00 IST
ஆற்காடு பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் திடீரென ஆய்வு செய்தார்.
ஆற்காடு:

ஆற்காடு பஸ் நிலையத்தில் நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர மன்றத் தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், ஆணையாளர் சதீஷ்குமார், பொறியாளர் கணேசன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ஆற்காடு நகரில் உள்ள பஸ் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து கள ஆய்வு செய்தார்.

அப்போது பஸ் நிலையத்தில் சிதலமடைந்து உள்ள பகுதிகள் மேற்கூரை ஆகியவற்றை பார்வையிட்டார் மேலும் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ள கட்டிடத்தை சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், அம்மா உணவகத்தை பார்வையிட்டு அங்கே விற்பனை செய்யப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

உணவகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் கணினி ரசீது வழங்க வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். பஸ் நிலையம் அருகில் உள்ள கண்ணன் பூங்கா லேபர் தெரு பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் பார்வையிட்டார்.

Similar News