உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காக சண்டி-குபேர லட்சுமி ஹோமம்
திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காக சண்டி-குபேர லட்சுமி ஹோமம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:
உலக மக்கள் கொரோனா தொற்று மற்றும் போர் உள்ளிட்ட துன்பங்களில் இருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழ்வதற்காக பிரார்த்தனை செய்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பவுர்ணமியை முன்னிட்டு வேத மந்திர வாழ்க்கை கட்டளை சார்பில் இன்று காலை குபேர லட்சுமி ஹோமம் மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றது.
இதில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அன்னதானம், சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக நேற்று மாலையும் கிரிவலப் பாதை ஜோதி விநாயகர் கோவில் அருகில் சாதுக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போளூர் எம்.எல்.ஏ.அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, டாக்டர் பழனி, சித்த மருத்துவர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.