உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2022-03-17 15:12 IST   |   Update On 2022-03-17 15:12:00 IST
விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி அருகே காளியாடிபட்டியை சேர்ந்தவர் பிலவேந்திரன் விவசாயி. மனைவி நிர்மலாதேவி.  இவர்களுக்கு 3 மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் 2 மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஒரு மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பிலவேந்திரன் தனது மனைவி மற்றும் ஒரு மகனுடன் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்கநகை மற்றும் ரொக்கம் ரூ.46 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Similar News