உள்ளூர் செய்திகள்
ராணிபேட்டையில் 16 வயதில் குழந்தை பெற்ற சிறுமி
ராணிபேட்டை அருகே 16 வயதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் முகமது பாஷா(வயது 30) இவர் அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
இவர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் அடிக்கடி பாலியல் பலாத்காரத்தில் ஈட்டுபட்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மங்கையர்க்கரசி வழக்கு பதிவு செய்து முகமது பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.