உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை அருகே டிரைலர் லாரி மோதி புகைப்பட நிபுணர் பலி
ராணிப்பேட்டை அருகே டிரைலர் லாரி மோதி புகைப்பட நிபுணர் பரிதாபமாக இறந்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் குமணந்தாங்கல் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி(வயது50) . புகைப்பட நிபுணர்.
முனுசாமி நேற்று மாலை குமணந்தாங்கல் கிராமத்தில் இருந்து பைக்கில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது லாலாப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் வந்த டிரைலர் லாரி இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் முனுசாமிக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.