உள்ளூர் செய்திகள்
ஜிகே வாசன்

உயர்சிறப்பு படிப்பில் ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு வரவேற்க கூடியது- ஜி.கே.வாசன்

Published On 2022-03-17 06:13 GMT   |   Update On 2022-03-17 06:13 GMT
மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

கடந்த 2020-ல் அ.தி.மு.க. ஆட்சியில் முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணையில் தமிழக அரசின் அரசாணைக்கு எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வெளிவந்திருப்பது அரசு மருத்துவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

அரசு மருத்துவர்கள் முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதன் மூலம் பெரும் பயனடைவார்கள்.

குறிப்பாக மருத்துவ மேற்படிப்புக்கான இடஒதுக்கீட்டால் தகுதியுடைய மருத்துவர்கள் மேற்படிப்பில் ஈடுபட்டு அரசு மருத்துவத்துறையில் தங்களை மேலும் ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக மருத்துவ சேவையாற்றுவார்கள்.

எனவே முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருப்பதை த.மா.கா சார்பில் வரவேற்று, உயர் மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கி தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News