உள்ளூர் செய்திகள்
கைது

கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் தொழிலாளி பலி- வெடிமருந்து கிடங்கு உரிமையாளர்கள் கைது

Published On 2022-03-16 16:09 IST   |   Update On 2022-03-16 18:40:00 IST
கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரம் புதுகாலனியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 65). இவர் க.மாமனந்தலில் உள்ள வெடிமருந்து கிடங்கில் வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் ஏழுமலை உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து அவரது மனைவி பத்மினி கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து வெடிபொருள் கிடங்கின் உரிமையாளர்கள் ‌ஷபியுல்லா, இஸ்மாயில் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News