உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் 18 கிலோ குட்கா கடத்திய வாலிபர் கைது

Published On 2022-03-16 15:57 IST   |   Update On 2022-03-16 15:57:00 IST
கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் 18 கிலோ குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் புதிய பஸ் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெட்டிக்கடையின் அருகில் ஒரு பேக்குடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அவர் வைத்திருந்த பையில் 18 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவர் விழுப்புரம் மாவட்டம், ஏரனூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது32) என்பதும், அவர் பெங்களூருவில் இருந்து விழுப்புரத்திற்கு குட்கா கடத்தி சென்ற போது கிருஷ்ணகிரியில் சிக்கி  கொண்டது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர். அவர் கடத்தி வந்த குட்கா விலை மதிப்பு ரூ.27 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News