உள்ளூர் செய்திகள்
.

உடலில் வௌளை தழும்பு: சக மாணவிகள் கேலி செய்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2022-03-16 15:53 IST   |   Update On 2022-03-16 15:53:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே சக மாணவிகள் கேலி செய்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள அப்புகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் சரண்யா (வயது15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் சரண்யாவுக்கு உடலில் வெள்ளை தழும்பு உள்ளது. இதனை பள்ளியில் சக மாணவ, மாணவிகள் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரண்யா கடந்த 13ந்தேதி அன்று வீட்டில் யாருக்கும் தெரியாமல் எலிபேஸ்டை சாப்பிட்டார். 

இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News