உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாவட்டத்தில் இன்று முதல் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள 76 ஆயிரத்து 500 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடக்க விழா நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாவட்டத்தில் இன்று முதல் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள 76 ஆயிரத்து 500 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 12 வயது முதல் 14 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் மீரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி மற்றும் நகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, அகஸ்டின் பிரபாகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரசன்னா, செந்தில்குமாரி, சங்கீதா, சுபாஷிணி, சரிதா, இளைஞரணி துணை செயலாளர் ஜெயசீலன், வெங்கடேசன், பாஸ்கர்,பிரவின், சரத், அருள் ஜீவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.