உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை& பணத்தை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத் துள்ள கொட்டு காரம்பட்டி பகுதியை சேர்ந்த வர் மல்லிகா (வயது50). இந்த நிலையில் இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளனர்.
நேற்றுமுன்தினம் நள் ளிரவு வீட்டின் கதவு பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உட னே இதுபற்றி மல்லிகாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் நேற்று காலை வந்து வீட்டை பார்த்தார்.
அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.
மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திட்டம்போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து மல்லிகா சிங்காரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.