உள்ளூர் செய்திகள்
கோவில் சாமி அணிகலன்கள் திருட்டு போன சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலில் சம்பவத்தன்று கோவில் காவலர் காலை 6 மணிக்கு கோவில் கதவைத் திறந்துவிட்டுச் சென்றதாகவும் , மீண்டும் 9 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிவபெருமான் நெற்றியில் இருந்த வெள்ளி விபூதிப் பட்டை திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோவில் மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி பொன்னமராவதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.