உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2022-03-16 13:24 IST   |   Update On 2022-03-16 13:24:00 IST
ஆலங்குடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாப்பன்மனையை சேர்ந்தவர் இளமுருகன் வயது 36.   இவருக்கும் வடகாடு பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கணவன் , மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராதா தனது தந்தையின் வீட்டுக்கு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து இளமுருகன் ராதாவை குடும்பம் நடத்த வீட்டிற்கு வரும்மாறு அழைத்தார்.

ஆனால் ராதா வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால்  மனவேதனை அடைந்த இளமுருகன் சம்பவதன்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் வடகாடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வடகாடு போலீசார்  சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று இளமுருகனின் உடலை மீட்டு   பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வடகாடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News