உள்ளூர் செய்திகள்
மேலமறைக்காடார் சிவன் கோவில் கும்பாபிஷேகம்
வேதாரண்யம் அருகே 100 ஆண்டுகளுக்குப் பிறகு மேலமறைக்காடார் சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்
கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மேலமறைக்காடார்
கோவிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று
கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி விக்னேஸ்வர
பூஜை, கணபதி, நவக்கிரக, லெட்சுமி ஹோமத்துடன்
யாகசாலை பூஜை துவங்கி நடைபெற்றது.
இன்று காலை 4ம் கால யாகசால பூஜைகள் நடைபெற்று.
புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து
சிவாச்சாரியர்கள் கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க,
கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம்
நடைபெற்றது. பின் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு
சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் திரளான
பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.