உள்ளூர் செய்திகள்
ஆடுகள் வழங்கிய போது எடுத்தப்படம்.

அரசு பள்ளி மாணவியின் தாய்க்கு ஆடுகள் வழங்கிய ஆசிரியர்கள்

Published On 2022-03-16 12:22 IST   |   Update On 2022-03-16 12:22:00 IST
அரசு பள்ளி மாணவியின் தாய்க்கு ஆசிரியர்கள் 5 ஆடுகளை வழங்கினர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் சசிகலா. இவரது தந்தையின் பெயர் ஆறுமுகம். தாயின் பெயர் மாரியாயி. இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

தனது தந்தை இறந்த பிறகு சசிகலா தாய்,  தம்பியுடன் மிகவும் கஷ்டமான சூழலில் பள்ளிப் படிப்பை தொடர்ந்துள்ளார். சசிகலாவின் குடும்பச்சூழல் அறிந்த தலைமை ஆசிரியர்  ஆண்டனி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சசிகலா குடும்பத்திற்கு உதவி செய்ய எண்ணினர்.

அதன்படி சசிகலாவின் அம்மாவிடம் கொடுக்க  5 ஆட்டுக்குட்டிகள் வாங்கினர். இந்த 5 ஆட்டுக்குட்டிகளை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  சாமி சத்தியமூர்த்தி, சசிகலாவின் தாயார் மாரியாயிடம் கொடுத்து நன்றாக வளர்த்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவி சசிகலாவிடம் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி பேசும் போது கூறியதாவது:
இப்பள்ளியில் இயங்கும் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வறுமையில்  வாடும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி செய்யும் செயல் பாராட்டுக்குரியதாகும். இதனால் இப்பள்ளியில் பயிலும்  மாணவர்கள் அனைவரும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை  இளம் வயதிலேயே வளர்த்துக் கொள்வார்கள் என்றார்.


Similar News