உள்ளூர் செய்திகள்
புதிய கட்டிடங்களை அமைச்சர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த போது எடுத்தப்படம்.

மாணவர்களின் நலன் காக்க சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு

Published On 2022-03-16 12:13 IST   |   Update On 2022-03-16 12:13:00 IST
மாணவர்களின் நலன் காக்க சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகம் மற்றும் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.குப்பசாமி தலைமைவகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.சாமி சத்தியமூர்த்தி வரவேற்றார். விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று அறிவியல் ஆய்வகம் மற்றும் இரண்டு கூடுதல் வதுப்பறைகளை திறந்து வைத்து பேசியதாவது.

மாணவர்களின் நலன் காக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை திணிக்க கூடாது. தங்களது குழந்தைகள் எந்தத்துறையில் செல்ல விரும்புகிறார்களோ அந்த துறையில் செல்ல அனுமதிக்கவேண்டும். அப்போதுதான் அத்துறையில் மாணவர்கள் பிரகாசிக்க முடியும்.

இப்பள்ளியில் மேலும் கூடுதல் வகுப்பறைகள் அமைக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.மணிமொழி, ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் அ.முத்து, நகரச்செயலர் அ.அழகப்பன், ஒன்றியக்குழு  உறுப்பினர்கள் அடைக்கலமணி, ஆதிலெட்சுமி சோமையா, பள்ளியின் தலைமையாசிரியர் கோவிந்தன் கலந்து கொண்டனர்.

Similar News