உள்ளூர் செய்திகள்
.

கல்குவாரிகளில் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல்

Published On 2022-03-15 15:59 IST   |   Update On 2022-03-15 15:59:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் கொரட்டகிரி கிராமத்தில் உள்ள கல்குவாரிகளில் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது.
கிருஷ்ணகிரி,

 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கொரட்டகிரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:&

கொரட்டகிரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி சுமார் ஐந்து கல் கிரஷர் குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கு கல் உடைப்பதற்காக சக்திவாய்ந்த போர் பிளாஸ்டிங் வெடி வைக்கப்படுகிறது. 

இதன் காரணமாக அருகாமையில் உள்ள எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கல் அரவை செய்யப்படுவதால் அதில் இருந்து வெளியேறும் தூசு விளைநிலங்களில் படர்ந்து விவசாயமும் பாதிக்கப் படுகிறது. இதனால் விவசாயத்தையே நம்பியுள்ள அப்பகுதி மக்களாகிய எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பயங்கர வெடி சத்தம், சிதறும் கற்கள் என இதனை சமாளித்து தான் குழந்தைகள் அந்த பகுதி சாலையை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலையில் கடந்த 15 நாட்களாக குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தொடர்ந்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. 

தொடர்ந்து எங்களின் மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, எங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மற்றும் வாக்காளர் அடையாளர் அட்டை ஆகியவற்றை சாலையில் வீசி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News