உள்ளூர் செய்திகள்
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி அடுத்த செட்டிமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 24). லாரி டிரைவர். இவர் அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கடந்த, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14&ந் தேதி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்படி இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ் பிரபாகரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி லதா தீர்ப்பு வழங்கினார்.
அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபாகரனுக்கு சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக, 20 ஆண்டு சிறை தண்டனைம் ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைதண்டனையும், சிறுமியை கடத்திய குற்றத் திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதித்தார். மேலும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தர விட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினர்.