உள்ளூர் செய்திகள்
லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற 2 பேர் கைது
சிதம்பரம் அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக கந்தன், காமராஜர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிதம்பரம் டவுன் போலீசார் சிதம்பரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பாவு சந்து பகுதியில் சென்றபோது 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உஷாரான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை போட்டனர். சோதனையில் அவர்களிடம் லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது. லாட்டரி டிக்கெட் விற்றதாக கந்தன், காமராஜர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.